15.12.2024, தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆற்றில் உறைகிணறுகளில் மண் சேர்ந்துள்ளதாலும் சில இடங்களில் மின் மோட்டார்கள் பைப்புகள் மற்றும் வயர்கள் சேதம் அடைந்துள்ளதாலும் அவற்றை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் சிறப்பு குழுக்கள் மூலம் நடைபெற்று வருகிறது.
படிப்படியாக குடிநீர் வினியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது ஒரு சில இடங்களில் மட்டும் குடிநீர் வழங்க ஓரிரு நாட்கள் கூடுதலாக தேவைப்படலாம்.
அது போன்ற பகுதிகளில் போர்வெல்கள் மூலமும் தேவைப்பட்டால் லாரிகள் மூலமும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் குடிநீரை கட்டாயம் காய்ச்சி ஆற வைத்து பருகிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குடிநீர் தொடர்பாக புகார்கள் ஏதும் இருப்பின், பொதுமக்கள் 9786566111 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment