பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 4 November 2022

பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம்‌ பாபநாசம்‌ நீர்‌ தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்‌ தலைவர்‌ மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ வே.விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்‌ மு.அப்துல்‌ வகாப்‌, சேரன்மகாதேவி சார்‌ ஆட்சியர்‌ முகமது சபீர்‌ ஆலம்‌, மாவட்ட ஊராட்சிமன்றத்‌ தலைவர்‌ வி.எஸ்‌.ஆர்‌.ஜெகதீஷ்‌ ஆகியோர்‌ (04.11.2022) தண்ணீர்‌ திறந்து வைத்தார்கள்‌.



இந்நிகழ்ச்சியில்‌ மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்‌ தலைவர்‌ மு.அப்பாவு தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ உத்தரவிற்கிணங்க, திருநெல்வேலி மற்றும்‌ தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாசன விவசாய பெருமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக பாபநாசம்‌, சேர்வலாறு மற்றும்‌ மணிமுத்தாறு நீர்தேக்கங்களில்‌ இருந்து அரசானை (வாலாயம்‌) எனர்‌:337/ நீர்வளத்‌ (எணர்‌2) துறை நாள்‌: 03.11.2022-ன்படி திருநெல்வேலி மாவட்டத்தில்‌ வடக்கு கோடை மேலழகியான்‌ கால்வாய்‌ (2260 ஏக்கர்‌) தெற்கு மேடை மேலழகியான்‌ கால்வாய்‌ (870 ஏக்கர்‌ ), நதியுன்னி கால்வாய்‌ (2460 ஏக்கர்‌), கன்னடியள்‌ கால்வாய்‌ (12500 ஏக்கர்‌), கோடகன்‌ கால்வாய்‌ (6000 ஏக்கர்‌), பாளையங்கால்வாய்‌ (9500 ஏக்கர்‌) திருநெல்வேலி கால்வாய்‌ (6410 ஏக்கர்‌), மற்றும்‌ தூத்துக்குடி மாவட்டத்தில்‌ உள்ள மருதூர்‌ மேலக்காய்‌ கால்வாய்‌ (12762 ஏக்கர்‌), மருதூர்‌ கீழக்கால்‌ கால்வாய்‌ (7785 ஏக்கர்‌), தெற்கு பிரதான கால்வாய்‌ (12760 ஏக்கர்‌) மற்றும்‌ வடக்கு பிரதானக்‌ கால்வாய்‌ (12800 ஏக்கர்‌, ஆகியவைகளின்‌ கீழுள்ள 86,107 ஏக்கர்‌, நேரடி மற்றும்‌ மறைமுக பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 04.11.2022 முதல்‌ 31.03.2023 முடிய 148 நாட்களுக்கு தளர்ணீர்‌ இருப்பு மற்றும்‌ நீர்வரத்தைப்‌ பொறுத்து தேவைக்கேற்ப தாமிரபரணி ஆற்றில்‌ தண்ணீர்‌ திறந்துவிடப்படும்‌.


இதன்மூலம்‌ திருநெல்வேலி மாவட்டத்தில்‌ அம்பாசமுத்திரம்‌, சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள்‌ மற்றும்‌ கிராமங்கள்‌, தூத்துக்குடி மாவட்டத்தில்‌ திருவைகுண்டம்‌, திருச்செந்தூர்‌, தூத்துக்குடி மற்றும்‌ ஏரல்‌ ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள்‌ மற்றும்‌ கிராமங்கள்‌ பயன்பெறும்‌. தமிழகத்தில்‌ நெல்‌ கொள்‌ முதல்‌ நிலையங்கள்‌ தேவைகேற்ப திறந்து வைக்கப்பட்டுள்ளது. மான்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ தலைமையிலான அரசு விவசாய நலனில்‌ மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மழை காலங்களில்‌ கடலில்‌ விணாக கலக்கும்‌ உபர்நீர்‌ நதிநிர்‌ இணைப்பு கால்வாய்‌ மூலம்‌ 3400 கனஅடி வீதம்‌ வறன்ட பகுதிகளாக நாங்குநேரி, திசையன்விளை, இராதாபுரம்‌ , உடன்குடி மற்றும்‌ தூத்துக்குடி மாவட்டத்தில்‌ உள்ளடக்கிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நதிநீர்‌ இணைப்பு திட்டப்பணிகள்‌ என்ற திட்டத்தை கொண்டு வந்தது முன்னாள்‌ முதலமைச்சர்‌ முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்கள்‌ தான்‌. அதன்‌ பிறகு இத்திட்டம்‌ 10 ஆண்டுகளாக கிடப்பில்‌ போடப்பட்டுள்ளது. 

தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ நதிநீர்‌ குடிநீர்‌ இணைப்பு திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக ரூ.369 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்‌. இத்திட்டப்பணிகள்‌ தொடர்ந்து நடைபெற்று 2023 ஆம்‌ ஆண்டு அனைத்து பணிகளும்‌ முடிவடையும்‌ என மாணர்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்‌ தலைவர்‌ திரு.மு.அப்பாவு அவர்கள்‌ தெரிவித்தார்கள்‌.


இந்நிகழ்ச்சியில்‌, தாமிரபரணி வடிநிலக்‌ கோட்ட கனர்காணிப்பு பொறியாளர் திருமதி.பத்மா, செயற்பொறியாளர்‌ மாரியப்பன்‌. பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்‌ தங்கபாண்டியன்‌, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்‌ சாலமன்‌ டேவிட்‌, கனகராஜ்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌ தங்கராஜன்‌, பேச்சிமுத்து, முருகன்‌, உதவி பொறியாளர்கள்‌ மகேஸ்வரன்‌, ஜெயகணேசன்‌ மற்றும்‌ முக்கிய பிரமுகர்கள்‌, அரசு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌. 

No comments:

Post a Comment

Post Top Ad