நெல்லையில் வந்தே பாரத் ரயில் துவக்கம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 24 September 2023

நெல்லையில் வந்தே பாரத் ரயில் துவக்கம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


திருநெல்வேலி சந்திப்பு நிலையத்திலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சேவை முறையாக இன்று முதல் துவக்கி வைக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையை புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் துவக்க நிகழ்வினை கொடியசைத்து வைத்தார். இந்த ரயில் திருநெல்வேலி விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி விழுப்புரம் மற்றும் தாம்பரம் வழியாக சென்னை எழும்பூர் சென்றடைகிறது. 



இந்நிகழ்வில் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர், அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள், வியாபார பொதுமக்கள், அரசு அதிகாரிகள், ரயில்வே துறை அதிகாரிகள் & ஊழியர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வந்து இந்த ரயில் சேவை துவக்க விழாவில் கலந்து கொண்டனர். இதற்காக திருநெல்வேலி ரயில் நிலையம் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


இதேபோன்று இந்தியாவில் பல இடங்களில் பெங்களூர், ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களிலும் இருந்தும் வந்தே பாரத் ரயில் சேவை துவங்க உள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad