மேலும் இந்தியா முழுவதும் ஒரே பொதுவான ஆங்கில மொழி மற்றும் எண்களை தான் பயன்படுத்தி வரும் நிலையில், அதை தவிர வேற்று மொழி வாகனங்கள் தமிழ்நாட்டிலோ அல்லது பிற மாநிலங்களுக்குள் செல்லும்போது அந்த வாகன எண்ணை சரிவர தெரிந்து கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது. மேற்படி வாகனங்களில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலோ, விபத்து ஏற்படுத்தினாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் இயலாது.
எனவே போக்குவரத்து காவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அரசு ஆணையை ஏற்று வாகன எண்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும், மேலும் இது போன்ற வேற்று மொழி வாகனங்களை கண்டறிந்து தகுந்த அபராதம் விதிக்க வேண்டும் அத்துடன் பொதுவான அனைவருக்கும் புரியும் வகையில் வாகன எண்களை பதிவு செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
படம் - திருநெல்வேலி VM சத்திரம் பகுதியில் சென்ற வேற்று மொழி வாகனம்.
No comments:
Post a Comment