திருநெல்வேலி மாவட்டம், நெல்லை டவுனில் முக்கிய பகுதிகளில் ஒன்றாக மேல மாட வீதி விளங்கி வருகிறது. இங்கு ஒரு சந்தியில் இருந்து துர்நாற்றத்துடன் வெளியாகும் கழிவுநீர் நீண்ட தூரம் வரை சாலையில் செல்கிறது.
கழிவுநீர் தேங்கி நிற்கின்ற இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவுவதற்கு காரணமாகின்றது. மேலும் நேதாஜி போஸ் மார்க்கெட் மற்றும் நெல்லையப்பர் கோவிலுக்கு பின் பிரதான வாசல் வழியாக செல்பவர்களும் இந்த பகுதியை கடந்து செல்கின்றனர்.
இந்த கழிவு நீரில் வாகனத்தில் வேகமாக செல்பவர்களினால் நடந்து செல்பவர்களின் ஆடைகள் அசுத்தமாகின்றது என பல்வேறு தரப்பினரும் புகார் கூறி வந்தனர். இது குறித்து நெல்லை மாவட்ட பொதுஜன பொது நலச்சங்க தலைவர் அயூப் கூறுகையில், இந்த கழிவுநீர் குறித்து 4 ஆண்டுகளாக மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நிரந்தர தீர்வுக்கு ஏற்பாடு செய்யாமல் அலட்சியம் செய்யப்படுகிறது. எனவே பொதுநலன் கருதி மீண்டும் கழிவு நீர் ஓடுவதை தடுத்திட நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
No comments:
Post a Comment