திருநெல்வேலி - ரியல் எஸ்டேட் அதிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு. - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 22 November 2023

திருநெல்வேலி - ரியல் எஸ்டேட் அதிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.


திருநெல்வேலி டவுன் வயல் தெருவை சேர்ந்தவர் முருகன்.இவரது மகன் சக்தி(30), நெல்லை டவுன் ஆர்ச்சில் இருந்து மவுண்ட் ரோட்டுக்கு செல்லும் சாலையில் இவருக்கு சொந்தமான இடம் உள்ளது. 


இந்நிலையில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் தனது குழந்தையை நெல்லை டவுன் தனியார் பள்ளியில் இறக்கிவிட்டு அவரது இடத்திற்கு செல்லும் வழியில், தனியார் பள்ளியின் பின்புறம் பார்வதி மகால் -அருணகிரி திரையரங்கம் இணைப்பு ரோட்டில் பெட்ரோல் பல்க் எதிரே பைக்கில் வந்த நபரால் சரமாரியாக வெட்டப்பட்டார்.


உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை செய்யும் நோக்கில் வந்தவரின் பைக்கும் சம்பவ இடத்தில் கிடந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை. 

No comments:

Post a Comment

Post Top Ad