திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படையைச் காவலர்களுடன் இணைந்து இன்று (13.01.2024) காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு உறியடி (பானை உடைத்தல்) போன்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிறப்புரையாற்றினார், அப்போது அவர் கூறியதாவது, ஆயுதப்படையில் உங்களுடன் இந்த பொங்கல் விழா கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, பொங்கல் விழா அனைத்து சமுதாயத்தினரும் விரும்பிக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும் என்றும், அனைத்து காவலர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
No comments:
Post a Comment