திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா, விக்கிரமசிங்கபுரம் நகர திமுக சார்பில் அடையக்கருங்குளம் "அன்னை ஜோதி சேவா" மனவளர்ச்சி குன்றிய 62 குழந்தைகளுக்கு நகர செயலாளர் கனேசன், நகர் மன்ற தலைவர் செல்வசுரேஷ் பெருமாள் ஆகியோர் மதிய உணவை வழங்கினர். உடன் நகராட்சி கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், சேவா டிரஸ்ட் செயலாளர் செல்வகுமார், மானேஜர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம்,ஏரல் தாலுகா சாயர்புரம் மெயின் பஜாரில் சாயர்புரம் நகர திமுக சார்பாக நகர திமுக செயலாளர் கண்ணன் தலைமையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. பொதுமக்களுக்கு கேக் வழங்கினர்.
ஸ்ரீவைகுண்டத்தில் தமிழகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஒன்றிய நகர கழகத்தின் சார்பாக கொண்டாடப்படட்டது. மேலும் ஸ்ரீவைகுண்டத்தில் அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் பள்ளியில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment