திருநெல்வேலி, மார்ச் 21,
இரட்டை ரயில்பாதை சிக்னல் பணிகள் கார ணமாக சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில் வழியாக குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ், தென்மாவட்டங்கள் பக்கம் நான்கு நாட்கள் தலைக்காட்டாது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை எழும்பூர் முதல் குருவாயூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் வரும் 23ம்தேதி முதல் 26ம்தேதி வரை 4 தினங்களுக்கு சென்னையில் இருந்து திண்டுக்கல் வந்து, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக குருவாயூர் செல்லும், மறுமார்க்கமாக குருவாயூர் - சென்னை
எக்ஸ்பிரசும், வரும் 23ம்தேதி தொடங்கி 26ம்தேதி வரை பாலக்காடு, பொள்ளாச்சி, திண்டுக்கல் வழி யாக இயக்கப்படும்.
இந்த ரயிலுக்கு பொள்ளாச்சி, பாலக்காடு ஆகியவை கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும். 4 தினங்களிலும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் கொடைக்கானல் ரோடு தொடங்கி, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில், இரணியல் ஆகிய தென்மாவட்ட பகுதிகளுக்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெல்லையிலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் பாசஞ்சர் ரயில்களும் ஐந்து நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது
அதே சமயத்தில், அந்தியோதயா இன்டர்சிட்டி ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நெல்லையிலிருந்து புறப்பட்டு சென்னை செல்லும்.
No comments:
Post a Comment