நெல்லை - பாராளுமன்ற தேர்தல் பா.ஜ.க ஆலோசனை குழு கூட்டம். - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 21 March 2024

நெல்லை - பாராளுமன்ற தேர்தல் பா.ஜ.க ஆலோசனை குழு கூட்டம்.

திருநெல்வேலி மாவட்டம். மார்ச் 21, வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, திருநெல்வேலி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை குழு கூட்டம் இன்று மாலை திருநெல்வேலி சந்திப்பில் வைத்து நடைபெற்றது.


இந்த ஆலோசனை குழு கூட்டத்தில் நாளை நடைபெற இருக்கின்ற திருநெல்வேலி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.


இக்கூட்டத்திற்கு பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர், பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் நீலமுரளி, தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் தளபதி பிச்சையா, வடக்கு மாவட்ட பொது செயலர் முத்து பலவேசம் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad