நெல்லை ரத்னா தியேட்டரில் மீண்டும் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படம். - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 24 March 2024

நெல்லை ரத்னா தியேட்டரில் மீண்டும் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படம்.


52 ஆண்டுகளுக்கு முன்பு 12-5-73 ல் வெளிவந்த மக்கள் திலகம் எம் ஜி ஆர் படம் உலகம் சுற்றும் வாலிபன் மீண்டும் வெளியாகி அரங்கம் நிறைந்தது. நெல்லை ரத்னா திரையரங்கில் கடந்த 15-3-2024- ல் வெளியாகியுள்ளது. 17-3-24 மற்றும் 24-3-24 ஞாயிற்றுக்கிழமை அன்று ரசிகர்கள் கூட்டத்தில் அரங்கம் நிறைந்தது. ரசிகர்கள் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

கட் அவுட் பால் அபிஷேகம் செய்து அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது. எம். ஜி ஆர் பக்தர் ஆழ்வார்திருநகரி ராஜப்பா வெங்கடாச்சாரி இந்த நாளில் 275 தடவையாக உலகம் சுற்றும் வாலிபன் படம் பார்த்ததாக கூறினார். மேலும் படம் வெளியான 11-5-19973 அன்று.0.40 பைசா டிக்கெட் ரூபாய் 7/- க்கு வாங்கியது இன்றும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணச் செயலாளர்   ஜாலி. முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஆறுமுகம். மாநகர கிழக்கு பகுதி செயலாளர் காந்தி வெங்கடாசலம். மாமன்ற உறுப்பினர். முன்னாள் மண்டல சேர்மன் ராஜன். ஆழ்வார்திருநகரி நகர செயலாளர் செந்தில் ராஜகுமார். மாஸ்டர் செல்வம். டவுண் ராஜா.தாளை சங்கர், சாமி, சடகோபன். கேடிசி சொர்ணம், கண்ணன், வேலாயுதம். முருகன். அஜீஸ் உட்பட ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.


- நாசரேத் நிக்சன் செய்தியாளர்  

No comments:

Post a Comment

Post Top Ad