லொள்ளு சபா சேஷு மாரடைப்பால் இன்று சென்னையில் காலமானார் - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 26 March 2024

லொள்ளு சபா சேஷு மாரடைப்பால் இன்று சென்னையில் காலமானார்

சென்னை, மார்ச் 26, வடக்குப்பட்டி_ராமசாமி படத்தில் நடித்து ரசிகர்களின் கைத்தட்டல்களை வாங்கி அனைவரையும் சிரிக்க வைத்த லொள்ளுசபா புகழ் சேஷூ (60), இன்று காலமானார். தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் சினிமாவில் அறிமுகமான சேசு, விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் உலகளவில் பிரபலமானார். 


கடந்த சில நாட்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, சமீபத்தில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேசு உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். 


அவரது மறைவு திரையுலகத்திற்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது மறைவுக்கு வடக்குப்பட்டி ராமசாமி படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad