திருநெல்வேலி, மார்ச் 26, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணிக்கான நெட் அல்லது செட் தேர்வுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளது.
தகுதி தேர்வு: தமிழக கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் உதவி பேராசிரியர் பணியில் நியமிப்பதற்கு நெட் அல்லது செட் தேர்வுகள் நடத்தப்படுகிறது. தமிழ், கணிதம் உட்பட மொத்தம் 43 பாடங்களுக்கான நடப்பு ஆண்டுக்கான செட் தேர்வு வரும் ஜூன் மாதம் மூன்றாம் தேதி கணினி வழியில் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான விண்ணப்பதிவு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நடப்பாண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு செட் தேர்வை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செட் தேர்வுக்கான பொதுப் பிரிவு கட்டணம் ரூபாய் 2500, பி சி எம், பி சி, டி என் சி பிரிவுக்கு ரூபாய் 2000, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 800 கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தேர்வு கட்டணம் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் செட் தேர்வுக்கான கட்டணம் கடந்த ஆண்டுகளை காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தேர்வர்கள் அதிகம் பாதிக்கும் நிலை உள்ளதால் செட் தேர்வு கட்டணத்தை குறைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள், பட்டதாரிகள் சார்பாக கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment