திருநெல்வேலி, ஏப்ரல் 6, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் வீடுகளில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை.
வேட்பாளரின் ஆதரவாளரான மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்த கணேஷ் மணி, இவரது வீடு குறிச்சியில் உள்ளது. இவர் நெல்லை வண்ணார்பேட்டை சுதர்சன் மருத்துவமனையில் மானேஜராக உள்ளார்.
இவரது வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டதில் ரூ.2 லட்சம் பணம், 22 "புல்"(full) மதுபான பாட்டில்கள், 100 வேட்டிகள், 100 நைட்டிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மற்றொரு ஆதரவாளரான குணசேகரன். இவர் நயினார் நாகேந்திரன் பங்குதாரராக உள்ள நெல்லை வண்ணார்பேட்டை லட்சுமி காயத்ரி ஒட்டலை நடத்தி வருகிறார். இவரது வீடு நெல்லை - தூத்துக்குடி பிரதான ரோட்டில் உள்ள பாளை கேடிசி நகரில் உள்ளது. அவரது வீட்டில் இருந்து ரூ.2 லட்சத்து 72 ஆயிரமும்,
மற்றொரு ஆதரவாளரான மணிகண்டன், இவர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீடு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ளது.
அங்கிருந்து ரூ.3 லட்சத்து 72 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று காலை பாஜக பிரமுகர் சதீஷ் உள்பட சிலரிடம் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது. கோடி கணக்கில் பணம் சிக்கிய நிலையில் அந்த பணம் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டுவரப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தேர்தல் அதிகாரிகள் அவரை கண்காணிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளரின் ஆதரவாளர்களின் வீடுகளில் நடைபெற்ற தொடர் சோதனையினால், நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment