செங்கோட்டை, ஏப்ரல் 08, செங்கோட்டை நகர திமுக சார்பில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் தேர்தல் பிரச்சாரம் துவக்கம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன் மேலிட பார்வையாளா் நடராஜன், கடையநல்லுார் சட்டமன்ற தொகுதி பார்வையாளரும் மாநில தொண்டரணி செயலாளா் ஆவின்ஆறுமுகம் ஆகியோர் ஆலோசனையின் பேரில் நகர செயலாளா் வழக்கறிஞா் ஆ.வெங்கடேசன் தலைமையில் செங்கோட்டையில் உள்ள 24 வார்டுகளில் அடங்கி இருக்கின்ற 23 பாகங்களிலும் அதாவது 23 முதல் 47 வரையிலான பாகங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணி துவங்கியது.
கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி முதல் மாலை 4மணிக்கு 1வது வார்டு முதல் 4வது வார்டு பகுதிகளிலும், 6ஆம் தேதியில் 5வது வார்டு முதல் 7வது வார்டு பகுதியிலும், 7ஆம் தேதியில் 8வது வார்டு முதல் 10வது வார்டு பகுதிகளிலும் 8ஆம் தேதி, 11வது வார்டு முதல் 13வது வார்டு பகுதிகளிலும், 9ஆம் தேதியில் 14வது வார்டு முதல் 16வது வார்டு பகுதிகளிலும், 10ஆம் தேதியில் 17வது வார்டு முதல் 20வது வார்டு பகுதிகளிலும், 11ஆம் தேதியில் 21வது வார்டு முதல் 24வது வார்டு பகுதிகளில் கூட்டணி கட்சியின் நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பு நிகழ்வு நடைபெற்றது.
நேற்றைய தினம் நடந்த வாக்குசேகரிப்பு நிகழ்ச்சிக்கு நகரச்செயலாளா் வழக்கறிஞா் ஆ.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா்கள் ஆ.சண்முகராஜா, மு.காதர் அண்ணாவி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவா் வழக்கறிஞா் மு.ஆபத்துக்காத்தான் மாவட்ட மருத்துவா் அணி துணை அமைப்பாளா் டாக்டர் மாரியப்பன் மாவட்ட அயலக அணி தலைவா் நசீர் ஆகியோர் முன்னிலைவகித்தனா்.
நகர அவைத்தலைவா் காளி அனைவரையும் வரவேற்று பேசினார். அதனை தொடா்ந்து வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து கழக ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளை எடுத்துக் கூறியும் சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
நிகழ்ச்சியில் நகர துணைச்செயாளா்கள் ஜோதிமணி, ராஜா, வார்டு கழக செயலாளா்கள் கோபால், கருப்பசாமி, வேலுமணி, குட்டிராஜா, விஜயபாரதன், பேச்சாளா் குற்றாலிங்கம், வார்டு பிரதிநிதிகள் கணபதி, நாடடாமை ஆறுமுகம், பாகமுகவர்கள் ஆட்டோ மாரியப்பன், துரைராஜ், கழக முன்னோடிகள் வைரமுத்து, மூர்த்தி, ஐயப்பன், சங்கர்கணேஷ், சிவக்குமார், செல்வம், நீராத்திலிங்கம்,மோகன், ஓம்சக்தி ஐயப்பன், பரமசிவன், நகர்மன்ற உறுப்பினா்கள் மேரி அந்தோணிராஜ், முருகையா, மகளிரணி மல்லிகா, சரோஜா காங்கிரஸ் நகரத் தலைவா் ராமர், நடராஜன், சித்திக், இசக்கியப்பன், சுப்பிரமணி, சுடலைமுத்து, ஜேம்ஸ், சீனிவாசன், செண்பகம், செல்வகணேஷ், ஆறுமுகம், மாரியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் சுப்பிரமணியன், சண்முகவேலு, சுந்தர், நாராயணன், தாலுகா செயலாளா் மாரியப்பன், செயற்குழு உறுப்பினா் சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளா் வேலுமயில், மாவட்டக்குழு உறுப்பினா் பால்ராஜ், தாலுகா குழு உறுப்பினா்கள் முருகேசன், மல்லிகா, முகம்மதுகாசீம், கிளைச் செயலாளா்கள் செல்லப்பன், ராமையா, சண்முகம், முத்துசாமி, உள்பட பலா் பெருந்திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனா்.
No comments:
Post a Comment