நெல்லையில் பரபரப்பு காங்கிரஸ் கட்சி பிரமுகர் கொலையா?
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாவட்ட கண்காணிப்பாளரிடம் தங்களது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருவதாகவும் அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது எனவும் நான்கு பக்கம் கொண்ட புகார் அளித்திருக்கிறார்.
இந்நிலையில் கரைசுத்து புதூர் உவரியில் (நாடார் உவரி) உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் உடல் இன்று (04-05-2024) கிடந்தது. தேர்தல் முடிந்த நிலையில் நடந்த சம்பவம் சந்தேகத்திற்குரியது,
கிழக்கு மாவட்ட தலைவர் கே பி கே ஜெயக்குமார் மாவட்ட எஸ்பிக்கு எழுதிய மரண வாக்குமூலம் கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரூபி மனோகரன் உட்பட சில காங்கிரஸ் தலைவர்களை குற்றம் சாட்டி அந்த கடிதத்தில் வாசகங்கள் உள்ளன தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உடனடியாக சென்னையில் இருந்து புறப்பட்டு நெல்லை வருகிறார்.
தனிப்படை அமைப்பு - நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து நெல்லை எஸ்.பி. சிலம்பரசன் விசாரணை செய்து வருகிறார்.
No comments:
Post a Comment