திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சித்திரை பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கம்..... - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 23 April 2024

திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சித்திரை பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கம்.....

 


திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சித்திரை பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கம்.....



ஏப்ரல் 24ந் தேதி சித்திரை பவுர்ணமி சிறப்பு ரயில்கள் திருநெல்வேலி-திருச்செ ந்தூர் இடையே இயக்கப்படுகின் றன என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து காலை 6:40 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06853  பயணிகள் சிறப்பு ரயில் 24.04.2024 காலை 8:15 மணிக்கு திருச்செந்தூர் வந்தடைகிறது.
மேலும் காலை 11:25 மணிக்கு நெல்லையில் புறப்படும் வண்டி எண் 06855 பயணிகள் சிறப்பு ரயிலானது மதியம் 1 மணிக்கு திருச்செந்தூர் வந்தடைகிறது.


மறு மார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06854 பயணிகள் சிறப்பு ரயில் காலை 10:50 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். மற்றும் ஒரு சிறப்பு பயணிகள் ரயில் மதியம் 1:30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு மதியம் 3 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad