திருநெல்வேலி, மே.15, நெல்லை மாவட்டம் வி. எம் சத்திரத்தை அடுத்துள்ள ஆரோக்கியநாதபுரத்தில் தமிழக அரசு சார்பில் 100 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
தற்போது அந்த பட்டாவில் குறிப்பிட்ட நிலங்கள் வேறு ஒருவருக்கு சொந்தமாக இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் இன்று (மே 15 காலை 9.30 மணியளவில்) நெல்லை திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, பின்னர் தகவலறிந்த காவல் துறையினர் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment