நெல்லையில் புது மாப்பிள்ளை வெட்டி கொலை
திருநெல்வேலி, மே.17, பாளையங்கோட்டை மாநகர மணிக்கூண்டு அருகே இன்று (மே 17) இரவு இசக்கிமுத்து என்ற நபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் முதல் கட்ட விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் வசவபுரத்தை சேர்ந்தவர் என்பதும் ஆனால் தற்பொழுது அவர் திம்மராஜபுரத்தில் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட இசக்கிமுத்துவுக்கு திருமணம் ஆகி ஒரு மாதமே ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பாளை சாந்தி நகர் மணிக்கூண்டு பகுதியில் இன்று இரவில் நடைபெற்ற இந்த கொலையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகின்றது.
No comments:
Post a Comment