நெல்லை கிழக்கு மாவட்ட மாணவர் அணிக்கான நேர்காணல் ஆலோசனை கூட்டம்
(நெல்லை கிழக்கு மாவட்ட மாணவர் அணிக்கான நேர்காணல் ஆலோசனை கூட்டம்) நெல்லை கிழக்கு மாவட்ட மாணவர் அணிக்கான நேர்காணல் தேர்வு நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் . மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்றது
நெல்லை தி.மு.க தலைவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவு பெயரில் நெல்லை கிழக்கு மாவட்ட மாணவர் அணிக்கான ஒன்றிய.நகர.பேரூர் கழக மாணவர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் நேர்காணல் மற்றும் தேர்வு நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், நெல்லை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமையில் மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு வரவேற்புரை ஆற்றினார்
மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் லெட்சுமணன் சீனிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் திருநெல்வேலி அஃப்னா பார்க் ஹோட்டல் கூட்ட அரங்கில் வைத்து நடைபெற இருக்கின்ற நேர்காணலை சிறப்பாக நடத்தி துடிப்புமிக்க இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை மாணவர் அணியில் சேர்க்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது முடிவில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ராஜதுரை நன்றி கூறினார்.
No comments:
Post a Comment