சங்கரன்கோவிலில் 5. 36 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய கட்டிட அலுவலக பணி. - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 20 August 2024

சங்கரன்கோவிலில் 5. 36 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய கட்டிட அலுவலக பணி.

தென்காசி மாவட்டம், ஆக.21. சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்படைக்கப்பட்ட மானிய வருவாய் திட்டம் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. 

மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தலைமை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமார், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தனர். 

இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். 

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்ணான்டோ, சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கந்தசாமி, மாரியப்பன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பரமகுரு, மாவட்ட பொருளாளர், நகர செயலாளர்கள், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன், சங்கரன்கோவில் யூனியன் துணைத்தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad