கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நல்லொழுக்க பயிற்சி முகாம். - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 19 August 2024

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நல்லொழுக்க பயிற்சி முகாம்.

கடையநல்லூரில் பேட்டை கிளை சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நல்லொழுக்க பயிற்சி முகாம் கிருஷ்ணாபுரம் தவ்ஹீத் நகர் பள்ளிவாசல் வளாகத்தில் பேட்டை கிளை தலைவர் நல்லூர் சுலைமான் தலைமையில் நடைபெற்றது. 

பயிற்சி முகாமில் மாவட்ட ,துணைச் செயலாளர் புளியங்குடி முகமது பிலால், அப்துல் பாசித், மாவட்ட தொண்டரணி செயலாளர் தாவூது மருத்துவ அணி செயலாளர் குட்டி அப்துல்லா பேட்டை கிளை நிர்வாகிகள் செயலாளர் மாலிக்,பொருளாளர். அபூபக்கர்சித்தீக், துணை தலைவர் செய்யது மசூது,துணை செயலாளர் அஜ்மல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பயிற்சி முகாமில் மாவட்ட செயலாளர் ஜலாலுதீன், மாநிலச் செயலாளர், சபீர் அலி, ஆகியோர் முகாமில் கலந்துகொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வீரர்கள் வீராங்கனைகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நல்லுலக்க பயிற்சிகளை அளித்தனர். 

இதில் திருமணம், இஸ்லாமிய வாழ்வியல், வணக்க வழிபாடுகள், ஒழுக்கங்கள், சமுதாய பணிகள், வட்டி, வரதட்சணை போதை பொருளை உட்கொள்ளுதல் குறித்த தீங்குகள் குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முகாமில் கடையநல்லூரில் உள்ள அனைத்து கிளை நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இதற்கான விரிவான ஏற்பாடுகளை தொண்டரணி திவான் மைதீன்,மாணவர் அணி பைசல்,மருத்துவ அணி பிலால் ஆகியோர் சிறப்பாக செய்தனர்.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad