நெல்லை மாவட்டம் கூடங்குளம் காந்தி நகரில் அமைந்துள்ளது அருள்மிகு சந்தணமாரி அம்மன் கோயில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் சில பிரச்சனை காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த்துறையினர் கோவிலுக்கு சீல் வைத்ததாக இதை எடுத்து மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இதை அடுத்து கடந்த ஒன்றாம் தேதி மதுரை உயர்நீதிமன்றம் கோவிலை திறக்கவும் பொதுமக்கள் வழிபடவும் ராதாபுரம் வருவாய்த்துறை மற்றும் கூடங்குளம் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை மதித்து 5 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த கோவிலை திறக்க முடிவு செய்யப்பட்டு வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு தீபாரதனை காட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து ஒரு தரப்பினர் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராதாபுரம் வட்டாட்சியருக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் நெல்சன் தலைமையில் ராதாபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.
ஆனால் போலீசார் ராதாபுரம் காவல் நிலையம் முன்பு தடுத்து நிறுத்தினர். இதனால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வள்ளியூர் காவல் கண்காணிப்பாளர் யோகேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 50 பெண்கள் உட்பட 105 பேர் கைது செய்யப்பட்டு ராதாபுரம் மணியம்மை மஹாலில் தங்க வைக்கபட்டு உள்ளனர்.
இதில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் பேபி மகேஷ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பிரவின், ராதாபுரம் ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்த்,களக்காடு ஒன்றிய செயலாளர் சுதாகர் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment