ராதாபுரம் பாரம்பரிய பயிர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 28 September 2024

ராதாபுரம் பாரம்பரிய பயிர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம்

ராதாபுரம் பாரம்பரிய பயிர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் 27.09.2024 வெள்ளிக்கிழமை சிதம்பரபுரம் கிராமத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஜவகர் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர்களும் சிதம்பராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பேபி முருகன் அவர்கள் மற்றும் ராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன் அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஆண்டு வரவு செலவு அறிக்கை அடுத்த ஆண்டிற்கான திட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. மேலும் பங்குதாரர்களுக்கு பங்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 


இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு சிதம்பரபுரம் ஆத்துகுறிச்சி திருவம்பலாபுரம் சில்லாத்திகுளம் கும்பிகுளம் பரமேஸ்வரபுரம் ராதாபுரம் சுப்பிரமணிய பேரி பாப்பன்குளம் பாவிரிதோட்டம் உதயத்தூர் கொத்தங்குளம் இளைய நயினார் குளம் வையகவுண்டம்பட்டி மேலப்பாக்கம் ஏரி கீழப்பாக்கனேரி ஆற்றங்கரை பள்ளிவாசல் காரியாகுளம் போன்ற கிராமங்களில் உள்ள பங்குதாரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 

 நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் அடுத்து வரும் ஆண்டுகளில் நிறுவனம் எவ்விதமான தொழில் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பங்குதாரர்களிடம் தெளிவாக தெரிவிக்கப்பட்டது.


இப்பொது குழு கூட்டத்தில் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் எம் வேலு பணியாளர்கள் அஞ்சலி ஆனந்தி குமாரி நாகலட்சுமி கலா ஆகிய பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad