ராதாபுரம் குடிநீர் ஆதாரமாக உள்ள குளத்தில் கொட்டப்பட்டுள்ள விஷக் கழிவுகளா?? - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 27 October 2024

ராதாபுரம் குடிநீர் ஆதாரமாக உள்ள குளத்தில் கொட்டப்பட்டுள்ள விஷக் கழிவுகளா??

ராதாபுரம் குடிநீர் ஆதாரமாக உள்ள குளத்தில் கொட்டப்பட்டுள்ள விஷக் கழிவுகள் - பொது மக்கள் குற்றச்சாட்டு.

நெல்லை மாவட்டம் விஜயாபதி ஊராட்சிக்கு உட்பட்ட தாமஸ் மண்டபம் அருகே கொடிக்குளம் உள்ளது. இந்த குளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம் அருகில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

அப்படிப்பட்ட கொடிக்குளத்தில் பைபர் தயாரிக்க பயன்படுத்தப்படும் மிகவும் ஆபத்தான கெமிக்கல் நிறைந்த கழிவுகள் குளத்தில் மலை போல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழை அவ்வப்போது பெய்து வருவதால் இந்த கெமிக்கல் பூமிக்குள் இறங்கி குடிநீர் விஷமாக மாற வாய்ப்பு உள்ளது. 

அதுமட்டுமில்லாமல் இந்த குடிநீரை குடிப்பதினால் பல்வேறு நோய்களும் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே சட்டத்திற்கு புறம்பாக அபாயகரமான கெமிக்கல் கழிவுகளை குளத்தில் கொட்டிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல் இந்த கெமிக்கல் கழிவுகளை அப்புறப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad