மூன்றடைப்பு அருகே அரசு பஸ் - மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து. - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 24 October 2024

மூன்றடைப்பு அருகே அரசு பஸ் - மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.


திருநெல்வேலி கன்னியாகுமாரி தேசிய நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு அருகே அரசு பேருந்தும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து.

நான்குநேரி அருகே உள்ள படலையார் குளம், JJ நகர்சேர்ந்த சுடலை மகன் மாயாண்டி மகேஷ்( 20) என்பவரும், முதலை குளம் செல்வராஜ் மகன் உசிலவேல் (36) என்பவரும் உயிரிழந்தனர். 

இச்சம்பவம் குறித்து மூன்றடைப்பு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் இறந்தவர்கள் 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மூன்றடைப்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் புதிய பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்தன. இதனால் அங்கு ஒரு வழி பாதை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் புதிய ரயில்வே பாலம் அமைக்கும் பணி முடிவடைந்தும் இன்னும் பாலம் திறக்கப்படாததால் போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன எனவே மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலத்தில பணிகள் முடிவடைந்ததால் அதனை பயன்பாட்டிற்காக திறந்து விட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad