வருடத்தின் அனைத்து நாட்களும் பரபரப்பாக இருக்கும் நிலையில் வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் சற்று அதிகரித்தே காணப்படும்.
இன்று அக்.30, தீபாவளி திருநாளுக்கு, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் கூட்டம் இன்னும் அதிகரித்து உள்ளது. அதே சமயம் வெயிலின் தாக்கம் அதிகம். ஆனால் பேருந்து நிலையத்தில் உள்ள மக்கள் உட்கார்ந்து ஓய்வு எடுக்கும் இடங்களில் எந்த ஒரு மின் விசிறியும் இயங்கவில்லை.
குடிநீர் குழாய்கள் அனைத்தும் பராமரிப்பு இன்றி காய்ந்து கிடக்கிறது. உட்கட்டமைப்பு வசதிகள் முழுமை பெற்றும் அதனை சரி வர இயங்காத நிலையில் வெறும் காட்சி பொருளாகவே உள்ளது.
திறப்பு விழாவிற்கு மட்டும் செயல் படுத்தி விட்டு அப்படியே விட்டு விட்டனர் அதிகாரிகள். மக்கள் வரிப்பணம் வீணாகி போனது ஏன் என்று பொது மக்கள் புலம்பி திரிகின்றனர்.
No comments:
Post a Comment