திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கண்ணபிரான் என்பவரை கைது செய்தது தொடர்பாக சிலர் தவறான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
அதில் ஒருவர் சமூக வலைதளமான YouTube பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கும் கண்ணபிரானுக்கும் இடையேயுள்ள பகையை குறிப்பிட்டுள்ளார்.
இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். அவ்வாறான எந்த தகவலும் இல்லை. இவ்வாறு உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment