புளியங்குடி,அக். 23 : புளியங்குடியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தென்காசி மாவட்ட எஸ்பி சீனிவாசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
சமீப காலமாக இணைய வழி குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது இதில் படித்தவர், படிக்காதவர் எனற வேறுபாடு இல்லாமல் ஏராளமான மக்கள் ஏமாற்ற படுகின்றனர் ஆகவே தென்காசி மாவட்ட சைபர் பிரிவு காவல் துறையும் ,புளியங்குடி கண்ணா மெட்ரிக், மகளிர் பள்ளிகள் இணைந்து புளியங்குடியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
கண்ணா கல்வி குழும நிர்வாக இயக்குனர் பார்கவி கண்ணா,ஏடிஎஸ்பி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . கண்ணா மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியை அன்னகளஞ்சியம் . அனைவரையும் வரவேற்றார். தென்காசி மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வசந்தி பேரணியின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். இந்த பேரணியானது புளியங்குடி பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று டிஎன் புதுக்குடி காமராஜர் சிலை அருகில் முடிவுற்றது.
மேற்படி பேரணியில் இணையவழி குற்றங்கள், செல்போன் பயன்டுத்துவதில் கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும், ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP), தொடர்பான குற்றங்கள் குறித்தும், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள், போலியான கடன் செயலிகள் (Loan App), போலி வேலை வாய்ப்பு குற்றங்கள், வங்கி கணக்குகளில் நடைபெறும் மோசடிகள், முக்கியமாக பட்டதாரி இளைஞர்களை குறி வைக்கும் பகுதி நேர வேலை மோசடி ஆகியவை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் எடுத்து சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் புளியங்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், ,புளியங்குடி காவல் ஆய்வாளர் [பொறுப்பு ]ஆடிவேல் உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் காவல் ஆளிநர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ , மாணவியர்கள் என சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.
மேலும் இணையவழி குற்றங்கள் தொடர்பான உதவிக்கு சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 ல் புகார் அளிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம் என சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment