தென்காசி மாவட்டம், தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சுந்தர் தலைமையில், மாநில பொருளாளர் நெல்லையப்பன் முன்னிலையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சுதந்திரமாக அமைதியாக கூடும் உரிமை ஆர்டிகல் 19 (1)பி மற்றும் சுதந்திரமாக அமைப்பாக செயல்படும் உரிமை ஆர்டிகல் 19(1)சி ஆகியவற்றை தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு மறுக்கும்,
தேவேந்திரகுல வேளாளர் மக்களை அச்சுறுத்தும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 29ஆம் தேதி மேல கடை நல்லூர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தேவேந்திர குல வேளாளர் சமுதாய திருமண மண்டபம் திறப்பு விழாவிற்காக வருகை தந்த நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் காவல்துறை பல்வேறு நெருக்கடிகளை கொடுக்கப்பட்டது.
சாலையில் நடந்து செல்ல அனுமதி இல்லை, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கக் கூடாது, நிறுவனத் தலைவர் பாதகைகளை வைக்க அனுமதி மறுக்கப்பட்டது, பேனர்கள் கிழிக்கப்பட்டது, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக அரசியல் கட்சிக்கு மட்டும் காவல்துறை பாரபட்சமாக செயல்படுகிறது. எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள உரிமை படி தேவேந்திர குல வேளாளர் சமூக பட்டியல் வகுப்பு மக்கள் அமைதியாக சுதந்திரமாக கூடவும், சுதந்திர அமைப்பாக செயல்படவும்,
தென்காசி மாவட்டத்தில் அச்சுறுத்தி வரும் காவல்துறையை அதிகாரிகளை கண்டித்தும், துஷ்பியோகம் செய்கின்ற தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கோரிக்கை மனு அளித்தனர் இதில் ஆண்களும் பெண்களும் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்தென்காசி மாவட்ட செயலாளர் எஸ்.கே.பி. கணேசன் பாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் அய்யனார், சங்கரன்கோவில் ஒன்றிய தலைவர் சீயோன் முருகன், கடையநல்லூர் மாரியப்பன், நெல்லை கண்மணி வீரன், துரைப்பாண்டியன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment