திருநெல்வேலி - இன்ஸ்டாகிராம் காதல் இன்ஸ்டண்ட்டாக முடிந்த சோகம் - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 1 December 2024

திருநெல்வேலி - இன்ஸ்டாகிராம் காதல் இன்ஸ்டண்ட்டாக முடிந்த சோகம்

இன்ஸ்டாகிராம் காதல் இன்ஸ்டண்ட்டாக முடிந்த சோகம்

நெல்லையில் இன்று திங்கட்கிழமை காதலியை பார்க்க வந்த காதலர் வெட்டிக்கொலை :

நெல்லை சாந்தி நகர் பகுதியில் கள்ளகுறிச்சியில் இருந்து தனது காதலியை பார்க்க வந்த விஜய் என்ற வாலிபரை பெண்ணின் சகோதரர் சிம்சன் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகியோர் வெட்டி கொலை செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்த பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர் வெறிச்செயல். இருவரும் கைது வழக்கு பதிவு செய்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்தவர் விஜய் வயது 25, இவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, அண்ணா கீழ தெருவை சேர்ந்த புஷ்பராஜ் என்ற சிம்சனின் சகோதரி ஜெனிபர் சரோஜாவை (23) காதலித்து வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இவர்கள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு ஜெனிபர் சரோஜா தனது காதலனை பார்ப்பதற்காகவும் அவரோடு சேர்ந்து வாழ்வதற்காகவும் வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்குறிச்சிக்கு சென்றதாக தெரிகிறது. ஏற்கனவே விஜயின் சகோதரி கணவரைப் பிரிந்து அங்கே வாழும் நிலையில் ஜெனிபர் சரோஜாவிற்கு புத்திமதி சொல்லி அவரை மீண்டும் திருநெல்வேலிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என அறிவுரை கூறியதாகவும் தெரியவந்துள்ளது. 

குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலும் காதலனை மறக்க முடியாமல் வாழ்ந்து வந்த ஜெனிபர் சரோஜா கடந்த 28ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.cஇதனால் ஆத்திரமடைந்த சரோஜாவின் சகோதரர் புஷ்பராஜ் என்ற சிம்சன் விஜயை திருநெல்வேலிக்கு அழைத்துள்ளார். 

பேச்சுவார்த்தைக்கு அழைப்பதை நம்பி இன்று காலை ரயில் மூலம் விஜய் திருநெல்வேலி வந்தடைந்துள்ளார். காலை 7:30 மணிக்கு ரயில் நிலையத்திலிருந்து சிவா வாடகைக்கு குடியிருக்கும் சாந்தி நகர் 24வது தெருவிற்கு அழைத்து வந்துள்ளனர். பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த பழைய கட்டிடப் பொருட்களைக் கொண்டு தாக்கியும் அரிவாளால் வெட்டியும் விஜய்யை படுகொலை செய்துள்ளனர். 

விஜயின் அலறல் சத்தம் அதிகமான அளவு கேட்க அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து பாளையங்கோட்டை போலீசார் திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையர் விஜயகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் ஆனந்தி சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி கைரேகைகள் உள்ளிட்டவைகளை கைப்பற்றி சென்றுள்ளார். பாளையங்கோட்டை காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் இதனிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட புஷ்பராஜ் என்ற சிம்சன் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் காதலால் தனது உயிரை இழந்துள்ளார். சரோஜா(23), அண்ணா நகர், மனக்காவலம் பிள்ளை நகர், பாளையங்கோட்டை, என்ஜினீயரிங் பட்டதாரி, கொலையுண்ட கள்ளக்குறிச்சி விஜய்க்கும், பாளையங்கோட்டை சரோஜாவுக்கும் நேரில் அறிமுகம் கிடையாது.

இன்ஸ்டாகிராம் தொடங்கிய நட்பு நாளடைவில் காதலாக பரிணாமம் அடைந்தது. இதனால் இருவரும் ஒருவருக்கொருவர் இன்ஸ்டாகிராம் மூலம் தங்களை அவர்கள் மனப்பரிமாற்றம் மூலம் காதலி சரோஜா தனது மனதில் காதலன் விஜயை வலிமையாக இன்ஸ்டால் செய்து கொண்டார்.

அதே போல காதலன் விஜய் தனது மனதில் காதலி சரோஜாவை இன்ஸ்டால் செய்து கொண்டார். நீண்ட நாட்கள் வேறு உலகத்தில் சஞ்சாரம் செய்து வந்த வெர்ச்சுவல்(virtual world pair) உலக ஜோடி நிஜ எதார்த்த உலகில்(real world) அடியெடுத்து வைக்க அவர்களது மனங்கள் முடிவு செய்து இன்ஸ்டாகிராம் மூலம் ரகசியமாக காதலி அழைக்க சொர்க்கத்தின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள காதலன் விஜய் கள்ளக்குறிச்சியில் இருந்து பாளையங்கோட்டை வந்தார்."சொர்க்க வாசல்" மட்டுமே பார்த்த காதலன் விஜய்க்கு சொர்க்கம் தெரியவில்லை.

மாறாக நிஜ உலகில் உள்ள சமூக, பொருளாதார காரணிகள் அவரை அழிவில்லாத உலகத்திற்கு கொண்டு சென்று விட்டது.சமூக ஊடகங்கள் சமூகத்தைச் மாற்றுமா? சீரழிக்குமா? என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad