இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாளை கீழ நத்தத்தில் பஞ்சாயத்து கவுன்சிலர் ராஜாமணி என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.
கொலையுண்ட மாயாண்டி உள்ளிட்ட, மேலும் அதே கீழ நத்தத்தை சேர்ந்த 3 பேர் ஏற்கனவே 8 மாதங்களுக்கு முன்பு கொலையுண்ட ராஜாமணி கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நிலையில்,
தற்போதைய 4 பேர் கொலை கும்பல் மாயாண்டியை மட்டும் இலக்கு வைத்து கொலை செய்தது ஏன் என்பது குறித்து நடைபெற்ற விசாரணையில் மாயாண்டியின் தந்தை வழக்கறிஞர் என்பதும்,
முன்னர் நடந்த கீழ்ப்பாட்டம் ராஜாமணி கொலை வழக்கை நீரத்து போக நீதிமன்ற புற நடவடிக்கைகள் மேற் கொண்டதாகவும், அதனால் பகைமை பாராட்டுதலின் உச்ச கட்டமாக ராஜாமணி கொலைக்கு பழிக்கு பழிவாங்கும் விதமாக மாயாண்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும்,
கொலையாளிகளில் ஒருவரான இருதயராஜ் என்பவரை வழக்கறிஞர் கார்த்திக் தம்பான் உள்ளிட்ட சிலர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து விட்டனர் என்று கூறப்படுகிறது.மேலும் காரில் தப்பிச் சென்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே கொலையுண்ட ராஜாமணியும், தற்போது கொலையுண்ட மாயாண்டியும் பாளை கீழநத்தத்தில் வெவ்வேறு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது
காவல்துறை யிடம் வழகறிஞர்கள் வாக்குவாதம் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டித்து
நெல்லை நீதிமன்றம் முன்பு கொலை நடந்ததை காவல்துறை வேடிக்கை பார்த்ததாக குற்றசாட்டு காவல்துறை கண் முன்னால் நடந்தாக கூறப்படும் நிலையில் காவல்துறை வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதம்.
No comments:
Post a Comment