நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கல்குவாரியில் விபத்தில் ஒருவர் பலி. பொக்லைன் ஓட்டுநர் படுகாயம். - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 18 December 2024

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கல்குவாரியில் விபத்தில் ஒருவர் பலி. பொக்லைன் ஓட்டுநர் படுகாயம்.

 நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கல்குவாரியில் விபத்தில் ஒருவர் பலி. பொக்லைன் ஓட்டுநர் படுகாயம்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இருக்கன்துறை அருகில் அமைந்துள்ள கிராமம் புத்தேரி இந்த கிராமத்திற்கு ஒட்டிய பகுதியில் தினேஷ் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. 

நேற்று கல்குவாரி வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தபோது மதியம் கல்குவாரியில் ஒரு பகுதி மேலே இருந்து முழுவதுமாக சரிந்து விழுந்துள்ளது. அப்போது கல்குவாரிக்குள் பொக்லைன் இயந்திரம் மூலம் கற்களை டாரஸ் லாரியில் ஏற்றுக் கொண்டிருந்த பொக்லைன் மற்றும் டாரஸ் லாரி முழுவதுமாக மண் கற்களால் மூடியது. 

அப்போது பொக்லைன் இயந்திரத்தின் ஓட்டுனர் புத்தேரி என்னும் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் வெளியே குதித்து தப்பியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

டாரஸ் லாரியில் சிக்கியுள்ள தென்காசியை சேர்ந்த அருள்குமார் என்பவரை மீட்கும் முயற்சியில் மீட்பு படை மற்றும் தீயணைப்பு துறை மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வந்தனர் மேலும் ஒரு டாரஸ் லாரியும் பொக்லைன் இயந்திரமும் பாறை சரிவில் சிக்கி இருப்பதால் அதனை மீட்க்கும் முயற்சியில் மூன்று பொக்லைன் இயந்திரங்கள் ஈடுபட்டன. 

இந்த நிலையில் 5 மணி நேரம் போராட்டத்திற்கு பின் அருள்குமார் சடலமாக மீட்கப்பட்டார் இதை எடுத்து ஆம்புலன்ஸ் மூலம் தீயணைப்பு மீட்பு பணியினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதை எடுத்து பேட்டி அளித்த நெல்லை கனிமவள உதவி இயக்குனர் பாலமுருகன் இந்த குவாரி விதிமுறைகளை சரியாக பின்பற்றாததால் தற்காலிகமாக மூடப்படுகிறது. இது குவாரியில் நடந்த விபத்து இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டும் என தெரிவித்தார்

No comments:

Post a Comment

Post Top Ad