தீராத வயிற்று வலியால் துடித்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை. - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 21 December 2024

தீராத வயிற்று வலியால் துடித்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை.

திருநெல்வேலி மாவட்டம், மானூர் தாலுகா பிரான்சேரி பஞ்சாயத்து மேட்டு பிராஞ்சேரி கிராமம், மந்திரமூர்த்தி வயது 29 திருமணம் ஆகாதவர். தகப்பனார் பெயர் பெருமாள் ஏற்கனவே இவர் இறந்து விட்டார், இந்நிலையில் மந்திரமூர்த்தி தனது அம்மாவுடன் வசித்து வந்துள்ளார். 

சம்பவ நடந்த இன்று 21.12.2024 வயிறு வலி காரணமாக, பிராந்தியுடன் குளிர்பானம் மற்றும் விஷம் கலந்து குடித்து உயிரிழந்து விட்டார்.

பிராஞ்சேரி கால்வாய் தாண்டி அருகே உள்ள பருத்தி குளம் அருகில் மேட்டு பிராஞ்சேரி சுடுகாட்டுக்கு கீழ்புறம் இறந்து கிடந்தார். 

தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு கங்கைகொண்டான் காவல் நிலைய ஆய்வாளர் உத்தரவின் பேரில் இரண்டு காவலர்கள் வந்து, ஆய்வு செய்த பின்னர். தனியார் வாகனம் மூலம். உடல் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது 

சம்பவ இடத்திலிருந்து
#திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad