திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாளையங்கோட்டை செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத் வழியாக உடன்குடி வரை செல்லும் தடம் எண் 137B என்ற பேருந்து அடிக்கடி வழித் தடத்தை விட்டு மாற்று வழித்தடத்தில், அதாவது கோவை, மதுரை போன்ற பெரு நகரங்களுக்கு மாற்றி விடப்படுகிறது.
இதனால் வழக்கமான வழித்தடத்தில் செல்லக்கூடிய பயணிகள் இரவு 10 மணி ஆகியும் பேருந்து நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. தற்போது டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ், நியூ இயர் போன்ற பண்டிகை காலமாக இருப்பதால், பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் கூட்டம் சற்று அதிகமாக உள்ளது.
இது குறித்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் நேர காப்பாளர் இடம் கேட்டபோது அவரால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. தினசரி பயணிக்கும் ஒரு பயணியிடம் கேட்டபோது வழக்கமாக செல்லக்கூடிய வழித்தட பேருந்து நேற்றும் 20.12.2024, இன்றும் 21.12.2024 கோயம்புத்தூர் நகருக்கு மாற்றி விடப்பட்டதால், உடன்குடி, நாசரேத் வழியாக செல்லும் பயணிகள் புதிய பேருந்து நிலையத்திலேயே காத்துக் கிடக்கின்றனர் என்று கூறினார்.
மேலும் இதுகுறித்து பயண சீட்டு பரிசோதகரிடம் கேட்டபோது இன்னும் பத்து நிமிடங்கள் மாற்று பேருந்து அதாவது வழக்கமான பேருந்து இன்றி வேறு ஏதாவது ஒரு பேருந்தை மேற்படி உடன்குடி வழித்தடத்தில் இயங்கச் செய்ய ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. குறிப்பாக இரவு நேர பேருந்துகள் நிறுத்தப்படுவதால் பெரும்பான்மையான பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். விடை கிடைக்குமா?
No comments:
Post a Comment