திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா பிரஞ்சேரி பஞ்சாயத்து உட்பட்ட மேட்டு பிராஞ்சேரி கிராமம் காலனி சுந்தரலிங்க நகர் காலனி தெரு மக்கள் பல மாதங்களாக மின்சாரம் பகல் நேரத்தில் குறைவாகவும் இரவு நேரங்களில் சரியானதாகவும் இருக்கின்றது.
இதனால் பகல் வேளையில் மின்சாரம் சீரான வகையில் வருவதில்லை என அந்தப் பகுதி கிராம மக்கள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் அந்தப் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் தங்கராஜ் இது சம்பந்தமாக பலமுறை தமிழ்நாடு அரசு தொலைபேசி இணையதள எண்ணிற்கு புகார் அளித்து இருக்கின்றோம் என்றும் அவர்கள் பெயரளவிற்கு மற்றும் வந்து அங்கு இருக்கும் மின்கம்பத்தில் ஏறி வயரிங் சரி செய்து பின்னர் செல்கின்றார்கள்
ஆனால் மறுபடியும் மின்சாரம் குறைவாக தான் வருகின்றது இது சம்பந்தமாக எத்தனை முறை புகார் தெரிவித்தாலும் உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் புகார் செய்தவுடன் அவர்கள் பகலில் மின்சாரம் குறைவாக இருக்கின்றது இரவு நேரங்களில் அதாவது மாலை 6 மணிக்கு மேல் மின்வாரிய அதிகாரிகள் தொடர்பு கொண்டு இப்பொழுது மின்சாரம் சரியாக இருக்கின்றதா என கேட்கின்றார்கள் எப்பொழுதும் மாலை 6 மணிக்கு மேல் மின்சாரம் சரியாக வந்து விடுகின்றது
எனவே அவர்கள் உடனடியாக புகார் மனுவினை முடித்து விடுகின்றார்கள். நேற்றும் புகார் புகார் அளித்திருந்த நிலையில் அவர்கள் பார்க்கவில்லை 6:00 மணிக்கு மேல் போன் செய்து கேட்டார்கள், வழக்கம்போல் அந்த புகார் மனுவை முடித்து வைத்து விட்டார்கள்.
தற்பொழுது இன்று மீண்டும் சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை இந்த ஏரியா வயர் மேன் அவர்களை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட புகார் குறித்து தெரிவித்தேன் அவர் மேல்அதிகாரி அவர்களிடம் தெரிவிக்குமாறு சொன்னார்கள் அதன்படி கங்கைகொண்டான் அலுவலகத்தில் உள்ள மின்வாரிய அதிகாரியிடம் இது தொடர்பாக தொலைபேசி வழியாக புகார் தெரிவித்து உள்ளேன் அது சம்பந்தமாக மின்வாரிய ஊழியர்கள் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார்கள்.
இது தற்காலிக தீர்வாக தான் இருக்கின்றது புகார் செய்திருக்கின்றேன் என்றும் வந்து மின்வாரிய ஊழியர்கள் வந்து பார்க்கின்றார்கள். இந்த பிரச்சனை இந்தப் பகுதியில் பல மாதங்களாக இருக்கின்றது எனவே இந்த பிரச்சனையை உடனடியாக சரி செய்து தரும்படி இங்குள்ள கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
No comments:
Post a Comment