கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங்கில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை. - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 24 December 2024

கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங்கில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை.

திருநெல்வேலி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங்கில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் எச்சரிக்கை

இன்று மாலை முதல் நாளை காலை வரை திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றும் இன்று இரவு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்பவர்களுக்கும் அதிகாலை பிரார்த்தனையில் பங்கேற்பவர்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் எஸ் பி தகவல் :

மாவட்டத்தின் துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வாளர்கள் துணை ஆய்வாளர்கள் காவலர்கள் என அனைத்து காவல்துறையினரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

நள்ளிரவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் பைக் ரேஸ் செல்வது போல் நடந்து கொள்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் வேகமாக இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என்றும் 

அதேபோன்று சாலையில் செல்லும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் வீலிங் செய்வது அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் செல்வதும் பொது இடங்களில் நின்று மது அருந்திவிட்டு பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் 

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ் பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்:

No comments:

Post a Comment

Post Top Ad