திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த மற்றும் பிடியாணை குற்றவாளிகளை காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மற்றும் பிடியாணை குற்றவாளிகள் 268 பேரை கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது திருநெல்வேலி ஊரக உட்கோட்டம், தாழையூத்து காவல் நிலைய கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஊசிபாண்டி என்பவர் கடந்த 8 மாதங்கள் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துவந்த நிலையில் உதவி ஆய்வாளர் சுடலைகண்ணு, தலைமையிலான போலீசார் மும்பை வரை சென்று தகவல் சேகரித்து குற்றவாளி ஊசிபாண்டியை கைது செய்தனர்.
மேலும் கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை சு.வலதி மற்றும் பால்மாரி ஆகியோரையும் கைது செய்ய காரணமாக இருந்த உதவி ஆய்வாளர் சுடலைகண்ணு, முதல் நிலை காவலர்கள் மணிகுட்டி, ராஜன் மற்றும் இரண்டாம்நிலை காவலர் வானுமாமலை ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், இ.கா.ப., நேரில் அழைத்து அவர்களை பாராட்டி வெகுமதி மற்றும் பரிசு வழங்கி ஊக்குவித்தார்.
No comments:
Post a Comment