திருநெல்வேலி மாவட்டம், விஎம் சத்திரம், கிருஷ்ணாபுரம் அடுத்துள்ள ஆச்சி மடம் அருகே இன்று (20.05.2023) மதியம் தென்காசி சென்று கொண்டிருந்த வேனும், திருநெல்வேலியில் இருந்து ஏரல், முக்கானி சென்ற பயணிகள் தனியார் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் 2 பேர் படுகாயமும் 20 பேர் லேசான காயமும் அடைந்தனர் சம்பவ இடத்திற்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி விபத்தில் காயம் பட்டவர்களுக்கு முதலுதவி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment