நெல்லை டவுன் பார்வதி தியேட்டர் ஆர்ச் நான்கு முனை சந்திப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக சாலைகள் குண்டு குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். இது பற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி உடனடியாக குண்டும் குழியுமான சாலைகளை செப்பனிட உத்தரவிட்டார்.
இதையடுத்து இரவோடு இரவாக அப்பகுதியில் மோசமாக காணப்பட்ட சாலைகள் ஜேசிபி மற்றும் ரோலர் இயந்திரம் கொண்டு சாலை சரி செய்யப்பட்டது. மாநகராட்சி ஆணையரின் அதிரடி நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment