திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது இதை முன்னிட்டு மழைநீர் வடிகால் பணிகள் தாமிரபரணியின் கடைசி கால்வாயான பாளையங்கால்வாய் தூர்வாரும் பணிகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.இராஜ கண்ணப்பன், நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மு.அப்துல் வஹாப் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்நிகழ்வில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment