ஜெம் அண்ட் ஜுவல்லரி கவுன்சில் ஆப் இந்தியா என்பது இந்தியாவில் நகை வணிகத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மதிப்புமிக்க ஒரு அமைப்பு ஆகும். அனைத்து முன்னணி நகை கடைக்காரர்களும் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் அதன் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட சிறந்த வடிவமைப்பிற்கான விருதுகளை வழங்குகிறது.இந்த ஆண்டின் சிறந்த இரண்டு விருதுகளுக்கு தென்னிந்தியாவில் தங்க நகை விற்பனையில் முன்னணி நிறுவனமான போத்தீஸ் ஸ்வர்ண மஹால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.இதில் சிறந்த நிறுவனத்திற்கான விருதும் சிறந்த விளம்பர படமான ஆயிரம் கண்கள் விளம்பர படத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் குறித்த நகை 3 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வடிவமைக்க 365 நாட்களில் 3285 மணி நேர உழைப்பு பொன்வினைஞர்களுக்கு தேவைப்பட்டது. தேசிய விருது பெற்ற மணப்பெண் நகைகள் நவம்பர் 30ஆம் தேதி வரை நெல்லை டவுன் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் ஷோரூமில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment