திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் முழுவதும் மழை நீர் வழிந்தோடும் வகையில் பிளாட்பாரங்களி்ன் ஓரங்களில் ஓடைகள் அமைக்கப்பட்டுள்ளது, அந்த ஓடைகளில் தூசு, துகள் மற்றும் குப்பைகள் கொட்டி கிடக்கின்றன, மேலும் அந்த ஓடைகளை அவ்வப்போது சுத்தம் செய்யாமல் இருப்பதால் அடைப்பு ஏற்பட்டு உள்ளது, பேருந்து நிலையம் முழுவதும் துர்நாற்றம் மற்றும் அழுகிய நிலையில் உள்ள கழிவுகளால் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது, இங்கு பொது மக்கள் குடிநீருக்கு பணம் கொடுத்து வாங்கும் நிலை உள்ளது, இதனால் தாகம் தணிக்க சுத்தமான பாதுகாக்கப் பட்ட குடிநீர் வழங்கபட வேண்டும் எனவும், மேலும் பயணிகள் அமரும் இருக்கைகள் உடைந்த நிலையிலும் பழுதாகியும் இருப்பதால் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் நெடு நேரம் பேருந்துகளுக்கு கால் வலியுடன் நிற்க வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது, எனவே சம்பந்த பட்ட துறை அதிகாரிகள் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்க பயணிகள் பொது மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment