திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் பற்றாக்குறை, பயணிகள் தவிப்பு. - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 26 May 2023

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் பற்றாக்குறை, பயணிகள் தவிப்பு.


கோடை காலம் முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்குவதால் வார இறுதி நாட்களில் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்ல பேருந்துகள் பற்றாக்குறை. முக்கிய வழித்தடங்களில் குறைவான பேருந்துகளை இயக்கப்படுவதாக பயணிகள் புகார், செய்வதறியாமல் தவிக்கும் பேருந்து நிலைய அதிகாரிகள். அரசு மீது மக்கள் அதிருப்தி அடைய முற்படும் போக்குவரத்து ஊழியர்கள், அலட்சியம் காட்டும் அலுவலர்கள். போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டியும், அதிகாரிகள் கூடுதலான வழி தடத்தை இயக்க வைப்பதாலும் பயண நேரத்தை அதிகரித்து வீணடிக்கும் ஓட்டுனர்கள், சுமார் 50 கிமீ உள்ள தொலைவை கடப்பதற்கு ஒரு மணி 50 நிமிடம் எடுத்து கொள்வதாக பயணிகள் கூறினர். 


இதனால் பேருந்து நிலைய நேர காப்பாளர்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபடும் தினசரி பணிக்கு சென்று திரும்பும் பயணிகள், குறிப்பாக தென்காசி திருச்செந்தூர், சாத்தான்குளம், உடன்குடி போன்ற முக்கிய நகரங்களுக்கு போதுமான பேருந்துகள் இருந்தும் சரியான நேரத்திற்கு பயணிகள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். சிரமத்தில் மக்கள் திளைக்கின்றனர். இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்க இருப்பதால் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டியும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்து விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad