திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள உலகம்மன் கோயில் வாய்க்காலில் சாக்கடை நீர் கலந்து அசுத்தமாகிறது, இந்த நீர் மணிமூர்த்தீஸ்வரத்தில் தாமிரபரணி ஆற்றில் சென்று கலக்கிறது. இதை நேரில் பார்த்தால் தாமிரபரணியில் குளிக்கவே தோன்றாத நிலை உள்ளது. இது குறித்து இன்றைய 29.05.2023 மாநகராட்சி கூட்டத்திலும் அனேக கவுன்சிலர்கள் இந்த பிரச்சினையை பற்றி பேசினர்.
மேலும் மாநகராட்சி மேயர் சரவணன், துணைமேயர் ஆகியோர் அங்கு நேரடியாக சென்று களஆய்வில் ஈடுபட்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எம்பவர் இந்தியா சுற்று சூழல் அமைப்பின் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment