இது குறித்து நாசரேத்தைச் சேர்ந்த நகை தொழிலாளி மகாராஜன் என்பவர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி, வண்ணார் பேட்டைப் புறவழிசாலை பணிமனை மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில், திருநெல்வேலி புறவழி சாலை பனிமனையில் இருந்து தடம் எண் 137பி பேருந்து இரவு 10 மணிக்கு திருநெல்வேலி முதல் உடன்குடி நாசரேத் வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்து வாரத்தில் சில நாள் இரவு இயக்காமல் வேறு ஊர்களுக்கு மதுரை திருப்பூர் போன்ற ஊர்களுக்கு அனுப்பபடுகிறது. அதனால் இந்த பேருந்தை நம்பியிருக்கும் வியாபாரிகள், கூலிதொழிலாளர்கள், மருத்துவமனைகளில் பணிபுரியும் நர்ஸ்கள், திருநெல்வேலியில் கடையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சென்று வரும் நோயாளிகள் இந்த பேருந்து வரவில்லை என்றால் அனைவரும் விடியற்காலை 4.30 மணி வரை பேருந்துக்காக காத்திருக்க வேண்டும்.
இரவு நாசரேத், மெஞ்ஞானபுரம், உடன்குடி வழிதடத்தில் இரவு 8.30க்கு பிறகு இந்த 10 மணி பேருந்துதான் உள்ளது. அனைவரும் பயன்படும் வகையில் இரவு நேரம் கடைசி பேருந்தினை தினசரி 10 மணிக்கு இயக்க வேண்டும். மேலும் இரவு 9.30 மணிக்கு நாசரேத் வழியாக திசையன்விளை சென்ற பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment