இதனால் பயணிகள் தடம் நான்கிலிருந்து தடம் ஒன்றிற்கு தங்கள் உடைமைகள் எடுத்து மிகுந்த சிரமத்துடன் தடம் ஒன்றிற்கு வந்தனர். தங்களை சற்று ஒய்வு எடுத்த சமயம் அடுத்த 10 நிமிடத்தில் மீண்டும் ஒலிபெருக்கி வண்டி தடம் இரண்டிற்கு வருகிறது என அறிவிப்பு ஒலித்தது. இப்படி பயணிகளை துன்பப்படுத்தும் ரெயில்வே நிர்வாகம் வண்டி வரும் தடத்தை சரியாக உறுதி செய்து அறிவித்தால் என்ன சிரமம்? தினசரி மாலை 6.50 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் புறப்படுவது வழக்கம் இந்த பயணிகள் ரயிலில் கடந்த சில நாட்களாக ஒரே ஒரு கார்டு பெட்டி மட்டும் இருப்பதால் அதனை கழட்டி மறுபடியும் பின்பக்கம் கொண்டு சென்று மாற்றுவது இதனால் நேரம் வீணாகிறது, இதற்கிடையில் திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களினால் இன்னும் அதிக காலதாமதம் ஏற்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே திருநெல்வேலி திருச்செந்தூர் பயணிகள் ரயிலில் ஒரே ஒரு கார்டு பெட்டி இருப்பதால் அதனை கழட்டி மாற்ற ஏற்படும் சிரமத்தினால் புறப்படும் நேரம் தாமதமாகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்னர் திருச்செந்தூரில் பயணிகள் சீட்டு கொடுக்கும் இடத்தில் தமிழ் மொழி தெரியாத காரணத்தினால் டிக்கெட் எடுக்காமல் சுமார் 300 பேர் பயணம் செய்த செய்தி வெளியானது, இது தவிர போலி டி டி ஆர் நடமாட்டம் என்ற செய்தியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று 21.06.2023 திருநெல்வேலி திருச்செந்தூர் வழித்தடத்தில் செல்லும் அனைத்து பயணிகள் ரயில்களும் சிக்னல் கோளாறு காரணமாக சுமார் அரை மணி நேரம் தாமதமாக செல்கின்றன.
No comments:
Post a Comment