பாபநாசத்தில் கோவில் நிர்வாகம் கோவில் மேற்கு பகுதியில் தாமிரபரணி ஆற்றுக்கு செல்லும் பாதையில் நிரந்தர கேட் ஏற்படுத்தி தடை ஏற்பாடு செய்வதை தொடர்ந்து , அகஸ்தியர் அருவி மீட்பு குழுவினர் , பிஜேபி, இந்திய முஸ்லிம் லீக் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் புகார் செய்ததை தொடர்ந்து கிருஷ்ணசாமி பாபநாசம் வந்து கோவில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் மேற்கு பகுதியில் வழியாக தாமிரபரணி ஆறு மற்றும் தலையணை வரை சென்று சுற்றி பார்த்தார்.
அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபங்கள், அய்யா வழி கோவில் ஆகிய இடங்களை பார்வையிட்டார். அப்போது டாக்டர் கிருஷ்ணசாமியிடம், கொள்கை பரப்பு செயலாளர் குணா, மாநில துணை அமைப்பு செயலாளர் சரஸ்வதி முருகன், நகர செயலாளர் தேவசகாயம், மாரியப்பன்,அம்பை ஒன்றிய செயலாளர் இசக்கி துரை, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் முப்பிடாதி, மாவட்ட துணை செயலாளர் வேல் முருகன், அம்பை நகர் செயலாளர் சேகர், சேரை கண்மனி, இந்திய முஸ்லிம் லீக் மாவட்ட பிரதிநிதி அப்துல் கலாம் ஆசாத் ,மன்சூர், ஆகியோர் கோவில் நிர்வாகம் தடை செய்யப்படும் இடங்ளை சுட்டிக்காட்டி, இதனால் பக்தர்கள் ஆற்றில் சென்று புனித நீராட முடியாது என்றும், பாதையை தடை செய்யக்கூடாது என்று வற்புறுத்தினர்.
பின்னர் அம்பையில் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேட்டியின் போது தெரிவித்ததாவது," இந்தியா பல்வேறு பகுதியிலிருந்து இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தற்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து ஒரு "டோல் கேட் அமைத்து வணிக நோக்கில் பக்தர்களிடம் காசை கபலீஸ்வரம் செய்யக் கூடாது. வற்றாத ஜீவ தாமிரபரணி ஆற்றில் ஆண்டு முழுவதும் பரிகாரம் என்ற பெயரில் திதி கொடுத்து, தண்ணீரை மாசுபடுத்தி வருகின்றனர். அதை முதலில் தடை செய்ய வேண்டும். தாமிரபரணி ஆறு இன்று குடிநீருக்காக மட்டும் இன்றி விவசாயத்துக்கும் பயனளித்து வருகிறது. பல கிராமங்களில் தாமிரபரணி ஆற்று நீர் தான் வாழ்வாதாரமாக திகழ்கிறது. எனவே தாமிரபரணி ஆற்று நீரை மாசுபடாமல் பாதுகாத்திட வேண்டும். தனியார் ஆலை கழிவு நீரை ஆற்றில் விடுவதையும் தடை செய்ய வேண்டும்.இதற்கு தமிழக அரசு," தாமிரபரணி பாதுகாப்பு ஆணையம்" ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இதற்காக டெல்லி வரை சென்று பிரதமரை சந்தித்து பேச உள்ளேன்.
இன்று மது குடிப்பதால் விபத்தில் பலர் மரிக்கின்றனர். அதற்காக "மக்கள் இயக்கம்" ஒன்றை ஆரம்பித்து மதுவை ஒழிக்க பாடுபடுவேன். பல ஆண்டுகளாக பணி செய்து வரும் மாஞ்சோலை தேயிலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 3 செண்ட் நிலம் இனாமாக வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேன்மை படுத்த வேண்டும். வனத்துறையினர் அவர்களுக்கு கொடுத்து வரும் இன்னல்களை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்காக ஒருதடவை மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் சுற்றுபயணம் மேற்கொள்ள இருக்கிறேன். தாங்கள் சட்ட மன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீர்களா? என்று கேட்டபோது, இன்னும் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் உள்ளது அப்போது பார்த்து கொள்ளலாம் என்று கூறினார்.
No comments:
Post a Comment