திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலத்தின் லே செயலாளர் ஜெய்சிங் செய்தியாளர்களை சந்திப்பின் கூறியதாவது, திருச்சபையில் “நிர்வாக ரீதியிலான நியமனங்கள் மற்றும் பிரச்சனைகளில் பேராயர் தலையிடுவதற்கு எந்த விதமான உரிமையும் அதிகாரமும் கிடையாது.
நல்ல நிர்வாகத்தை கெடுக்கும் நோக்கில் பேராயர் செயல்பட்டு வருகிறார். கொள்ளையடிக்கும் நபர்களுக்கு புதிய நிர்வாகிகளாக பதவியும் வழங்கிவருகிறார். ஊழியம் செய்வதற்கு மட்டுமே பேராயருக்கு அதிகாரம் உள்ளது. இன்றைய தினம் திருச்சபை அலுவலகத்தில் நடந்த பிரச்சனைக்கு சபைக்கு சம்பந்தமே இல்லாத காட்ப்ரே நோபல் தான் காரணம்.
தென்னிந்திய திருச்சபை அலுவலகத்தில் கலகமூட்டும் நோக்கம் கொண்டே அவர் செயல்பட்டார். குண்டர்களை அழைத்து வந்து நாடகமாடி பிரச்சினையை ஏற்படுத்தினார்" என தெரிவித்தார்.
No comments:
Post a Comment