இன்று நடைபெற்ற போட்டிகளில் நெல்லை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பாளையங்கோட்டை நகர் வட்டார கல்வி அலுவலர் திருமதி ஜெபரத்தினம் சுகந்தி அவர்கள் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் ஜெயராஜேஸ் வித்யா மந்திர் பள்ளி அட்மின் அக்மின் புஷ்மதா, புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி வித்தியா ஶ்ரீ, நாலாவது வார்டு தொடக்கப்பள்ளி இந்துமதி, இந்து நாடார் தொடக்கப்பள்ளி செல்வ பவின், மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஷிவானி, புஷ்பலதா மெட்ரிக் பள்ளி நித்திகா, தூய மரியன்னை பள்ளி மோனாலிசா, செவன் டாலர் பள்ளி முத்து பிரியா, இந்து நாடார் தெற்கு அச்சம்பட்டி ரேணுகா ஸ்ரீ மைக்கேல் தேவசகாயம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கட்டுரை போட்டியில் சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலை பள்ளி மாணவி விஷ்ணு பிரியா ,அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி மாணவி சுபா, புஷ்பலதா மெட்ரிக் பள்ளி மாணவி அக்க்ஷா ஆகியோரும் ஓவிய போட்டியில் முனஞ்சிப்பட்டி குருசங்கர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் கோசல் ராம், புஷ்பலதா வித்யா மந்திர் மாணவன் ஹர்ஷா, நசீனா பாத்திமா மெட்ரிக் பள்ளி மாணவி அபியா நஜ்மா ஆகியோர் வெற்றி பெற்றனர் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment